மக்களை ஏமாற்றுகிறது யாழ் மாநகர சபையின் பாதீடு: தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!

Thursday, November 28th, 2019

மக்களுக்கான பாதீடு என சொல்லி இவ்வருடமும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் யாழ் மாநகரின் ஆட்சியாளர்கள் முதுற்பட்டதனால் மக்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகரின் பாதீட்டை நாம் எதிர்த்து தோற்கடித்தோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரின் உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரின் பாதிடு தோற்கடிக்கப்பபட்டமை தொடர்பில் இன்றையதினம் ஊடகவியலாளனர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில் –

கடந்த முறையும் மக்கள் நலனற்ற வகையிலான ஒரு பாதிட்டை முன்மொழிந்திருந்த ஆட்சியாளர்கள் எமது கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் அதை நிறைவேற்றியிரந்தனர். ஆனால் இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை.

கற்பனையிலான வரைபை முன்மொழிந்து அதற்கு அங்கிகாரம் கோருவதென்பது ஏற்க முடியாததொன்றாகும். ஆனால் அதையே யாழ் மாநகரின் ஆட்சியாளர்கள் செய்ய முற்படுகின்றனர். வருமானத்திற்குரிய வழிமுறைகளை தேடிக்கண்டுபிடிக்காமல் வரிகளை அதிகரித்து மக்கள் மீது அதை திணிக்க முற்படுகின்றனர்.

அதுபோலவே ஆடம்பர செலவீனங்களையும் அதிகரித்துள்ளனர். தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை பறந்தள்ளி விட்டு இன்னும் பல கற்பனையான முன்மொழிவுகளை காட்டி சபையின் அங்கீகரத்தை கோரிகின்றனர்.

இதை எமது கட்சி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அந்தவகையில் இந்த பாதீட்டை நாம் எதிர்த்தோம். அது தோற்கடிக்கப்பட்டது என்றார்.

Related posts:

இலங்கையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 824 ஆக உயர்வு - கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில்...
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தவறுகளுக்கான தண்ட பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தும் முறை அறி...
நிர்மாணத்துறையில் பிரச்சினை - உரிய முறையில் ஆராய்ந்து தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜன...