மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிரத நிலையங்களில் மஞ்சள் கோடு!

Friday, July 6th, 2018

கடந்த ஐந்து மாத காலத்தினுள் புகையிரதம் மோதிய விபத்துக்கள் காரணமாக 241 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் புகையிரத விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது.

பிரதான புகையிரதங்கள் மற்றும் புகையிரத மேடைகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வேலைத்திட்டம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புகையிரத மேடைகளில் மஞ்சள் நிற கோடு பதியப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றத்தின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா தொற்று வலயத்திலிருந்து தாவடி பிரதேசம் நீக்கம் – பாதுகாப்புத் தரப்பும் வெளியேற்றம்!
மாகாணங்களின் அபிவிருத்திக்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் – தமிழ் பிரதிநிதிகளிடம் இந்தி...
ஐ.எம்.எப் உடன்படிக்கை தொடர்பில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் சீனா உறுதி - சீனாவின் தொடர்ச...