மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, April 4th, 2021

 “கோட்டாபய ராஜபக்க்ஷ என்ற தனிமனிதன் இங்கு முக்கியமானவர் அல்ல. அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானவை என்றே நான் எப்போதும் கூறி வருகின்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாம் அவற்றையே பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நீங்கள் துல்லியமாக உற்று நோக்கினால், ஒரு விடயம் தெளிவாகப் புலப்படும். எதிர் சக்திகள் முன்னெடுத்துவரும் போலிப் பரப்புரைகளின் நோக்கமும் இந்த கொள்கைகளைத் தோல்வியுறச் செய்வதே என்றும் அது கோட்டாபயவை அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டின் சுபீட்சத்துக்கான எமது அந்த கொள்கைகளுக்கே எதிர்த்தரப்பினர் அஞ்சுகின்றனர்.

ஆனால் அவர்களது போலிப் பரப்புரைகள் அனைத்தையும் தோற்கடித்து, மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் . இதை நிறைவேற்றியே தீருவேன் என்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார்..

அதேநேரம் தான் அதிகாரத்திற்கு வரும்போது வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம், கொவிட் நோய்த் தொற்றுக்கு மத்தியலும்கூட தேசிய பசுமைப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்த ஜனாதிபதி, தனது பதவிக்காலத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போகுமானால் தன்மீது குற்றம் சுமத்துமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டார்

அதேவேளை தற்போது பேசுபொருளாக உள்ள விடயம் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி, நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனைக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொருத்தமானதல்ல என அண்மையில் கண்டறியப்பட்டிருப்பது இந்த பரிசீலனையின் பெறுபேறாகவே என்றும் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி குறித்த பரிசீலனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு நுகர்வு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.

அதநேரம் தான் அதிகாரத்திற்கு வந்து குறுகிய காலப்பகுதியில் மேற்கொண்டுள்ள பணிகள் தொடர்பில் விளக்கிய ஜனாதிபதி, சுற்றாடலுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திவந்த செம்பனை அல்லது முள்தேங்காய் பயிர்ச் செய்கையை முழுமையாக தடை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் தேங்காய் எண்ணெய் நுகர்வில் சாதகமான பெறுபேறுகளை அறிந்து பாம் ஒயில் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது என்றும் நாட்டினுள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதற்கான வழிகளும் மூடப்பட்டுள்ளன என்றுமு; சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி சுற்றி வளைப்புகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை கைப்பற்றுவதற்கு முடிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: