மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவை வழங்குவதே எமது கடமை – ஜனாதிபதி உறுதி!
Friday, July 2nd, 2021பண்டைய விவசாய முறைமைகளுக்கு மீள திரும்பி, மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவை வழங்குவதே தங்களின் முக்கியமான கடமையும் பொறுப்புமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள நாடளாவிய ரீதியில் உள்ள 11 இலட்சம் விவசாயிகள் சார்பில், மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சேதனப் பசளையைப் பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறைக்காக ஓர் அணியின் கீழ் இருந்து சேதனப் பசளை சவாலை வெற்றிகொள்வதற்காக ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இலங்கைத் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் மாவட்ட விவசாயப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது.
சேதனப் பசளையை அறிமுகப்படுத்தியதன் பின்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்துள்ளார்.
இதற்கு முன்பு இருந்த பல அரசாங்கங்கள், சேதனப் பசளை பயன்பாட்டின் மூலமான விவசாயத்தை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தன.
இருப்பினும், அவை தோல்வியடைவதற்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்பட்டு, புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையே என ஜனாதிபதி கூஇதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிலர், இந்த செயற்பாட்டை பின்னோக்கிச் செல்லும் முயற்சியாக சித்தரிக்க முயல்கின்றனர். எவ்வாறாயினும், முழு உலகிலும் ஒரு புதிய போக்காக இருக்கும் சேதனப் பசளையைப் பயன்படுத்தி, நாட்டை விவசாயப் பொருளாதாரத்தின் புதிய பாதைக்குக் கொண்டு செல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தத்திட்டத்துக்கு எதிராகப் பேசும் பலர், அதிக விலைக்கு சேதனப் பசளையைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும், இரசாயன உரங்களின் பயன்பாட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்றும் சட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி கடந்த ஐந்து வருட காலப்பகுதியில். பெரும்பாலான விவசாய நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தன. ஆனால் விவசாயத்தை மேம்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாவாக இருந்த நெல்லின் விலையை 50 ரூபாவாக உயர்த்தியது விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.
அதன்பின்னர், விவசாயிகள் தங்களது ஒரு கிலோ கிராம் நெல்லை 65 முதல் 68 ரூபாய் வரை விற்பனை செய்ய முடிந்தது. இதன்போது, நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட்டது.
அந்தவகையில் எதிர்கால சந்ததியினரைத் தொற்றா நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காக வருடாந்தம் இரசாயன உர இறக்குமதி செய்வதற்காகச் செலவிடப்படும் 80 ஆயிரம் மில்லியன் ரூபாவை, நாட்டின் விவசாயிகளுக்குக் கிடைக்க வழிசெய்வதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|