மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் போது அத்துறைசார்ந்தோர் மக்களின் நலன்களில் கரிசனை கொள்வது அவசியம் – ஊர்காவற்றுறை பிரதேச சபையில் வலியுறுத்து!

Tuesday, February 8th, 2022

மக்களுக்கான சேவைகளை முன்னெசுக்கும்போது அவர்களது எதிர்பார்புக்களை முழுமையாக மேற்கொள்ள முடியாவிட்டாலும் செய்யும் செயற்பாடுகள் சிறப்பாக அமைய சபையின் கண்காணிப்பு அவசியம் எனவும் அதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சபையின் உறுப்பினர்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்றுறை பிரதேச சபையின்  தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிலையில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அவை அந்தந்த தரப்பினரது கட்டுப்பாட்டுக்குள் வைத்து மேற்கொள்ளப்படுவதால் அவற்றின் தரம் ஆயுள் காலம் என்பன உத்தரவாதமற்ற வகையில் முன்னெடுக்கப்பட்டவருகின்றன என சபையின் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அந்தவகையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தரம் குறித்து கண்காணிக்க சபைக்கு அனுமதி இருக்க வேண்டும் என்றும் இவ்வாறான நிலை உருவாக்கப்படாமையால் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல செய்றிட்டங்களின் போது அதன் தரம் மற்றும் உத்தரவாத்தில் உறுதித்தன்மை இன்மை காணப்படுகின்றது.

அதேபோன்று நீர் வழங்கலுக்காக குளய்களை பொருத்தும் செயற்பாடுகளிலும் பாரிய அசௌகரியங்களை மக்கள் எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கும்போது நீர்ப்பாசன திணைக்களத்தின் திட்டமிடப்படாத செயற்பாடுகளால் வீதிகள் பல பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன.

அத்துடன் திருத்த வேலைகளுக்காக நீர் துண்டிக்கப்படுவதும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றது. இதனால் மக்களுக்கான நீர் வழங்கலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. அத்துடன் நாளாந்த நீர் தேவைக்காக மக்கள் பெரும் நிதிகளை செலவழிக்க நேரிடுகின்றது. எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் குறித்த தரப்பினரது அசமந்த நிலை தொடர்பில் சுட்டிக்காட்டி அப்பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தவிசாளர் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் போது அத்துறைசார்ந்தோர் மக்களின் நலன்களில் கரிசனை கொள்வது அவசியம் என வலியுறுத்தியிரந்ததுடன் அவை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு கடிதமூலம் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் மின்சார இணைப்புகள் கொடுத்தல் திருத்தம் செய்தல் மற்றும் முக்கிய இடங்களில் மின்விளக்கு பொருத்தலை மேற்கொள்ளவதற்கும் சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்

வீதிகள் குறிப்பாக கொங்கிறீற் வீதி அமைக்கப்படும் போது பிரதேச சபைகளின் ஆதிக்க வரையறைக்குள் உள்ள வீதிகளை வீதி அதிகார சபையிடம் சபையால் கையளிக்கப்பட்டாலும்  அவற்றின் தரம் குறித்து கண்காணிக்க சபைக்கு அனுமதி இருக்க கொடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: