மக்களுக்கான  சேவையை நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன் – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, November 1st, 2018

என்னை ஒரு மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்த மக்களுக்கான சேவையை கடந்த 5 வருடங்களில் நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன். ஐந்து வருடங்களில் ஒதுக்கப்பட்ட எட்டுக் கோடியே என்பது இலட்சம் ரூபா நிதியில் அதிகமான தொகை மக்களின் வாழ்வாதரத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளருமான வை.தவநாதன் அவர்கள் தெரிவித்தார்

தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயத்தினைக்களத்தினூடாக நீரிறைக்கும் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வாக்களித்து என்னை மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்த மக்களுக்கு என்னால் இயன்றளவு சேவை செய்திருக்கிறேன் என தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் தவநாதன் அவர்கள் இவ்வாறு வழங்கப்படுகின்ற உதவிகளை மக்கள்  சரியானமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மாவட்ட விவசாயப் பணிப்பாளர் போ.அற்புதச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 14 பயனாளிகள் வால்வாதார் உதவிகளை பெற்றுக்கொண்டனர்.

unnamed

Related posts: