மக்களின் வரிப்பணம் வீண் விரயம் செய்வதை ஏற்கமுடியாது : யாழ் மாநகர முதல்வருக்கு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சுட்டிக்காட்டு!

Friday, October 26th, 2018

மக்களின் வரிப்பணம் வீண் விரயம் செய்யப்படுவதை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது அந்தவகையில் யாழ் மாநகர மேயரின் வினைத்திறனான செயற்பாட்டுக்கு மேலதிக ஆளணியை உருவாக்க முன்வைக்கப்பட்ட கருத்தை ஏற்கமுடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிடடுள்ளனர்.

யாழ்ப்பாண மாநகரசபை அமர்வு மேயர் ஆனோல்ட் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது மேயரின் செயற்பாடுகளை பிரத்தியேகமாகச் செய்வதற்கும் வினைத்திறனான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் மேலதிகமாக சுமார் 4 பேர் வரையில் உள்வாங்க முடியும் என்பதுடன் யாழ்ப்பாண மேயருக்கும் ஆளணியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிடடுள்ளனர்.

குறித்த தீர்மானத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் மேயரது செயற்பாடகளுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக பணியாளர்கள் போதுமானதே, மக்கள் வரிப்பணத்தில் இருந்து எடுத்து மேலதிகமாக ஆளணியைப் பெற்று அவர்களுக்குச் சம்பளம் வழங்கி தேவையில்லை. அந்தவகையில் குறித்த விடயத்தை நாம் எதிர்ப்பதாகவும் இது தொடர்பில் ஆராய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவை என்றும் கோரிக்கை முன்வைத்தனர். இதனால் குறித்த விடயம் தீர்வு எட்டப்படாது முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: