மக்களின் வரிப்பணத்தில் இன்னொரு விசாரணைக் குழுவா? மாகாண சபையின் விசாரணை அறிக்கை எங்கே?… மாநகரசபையில் றெமீடியஸ் கேள்வி!..

Wednesday, May 9th, 2018

கடந்த யாழ் மாநகர சபை மீதான நீதியான விசாரணை அறிக்கை மக்களின் முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை நாம் வரவேற்கிறோம். ஆனாலும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மாகாகாண சபையின் அறிக்கைகள் இதுவரை சமப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் மீண்டும் மக்களின் வரிப்பணத்தில் இன்னொரு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டுமா? – இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பில் யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் பிரபல சட்டத்தரணி முடியப்பு றேமீடியஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் (08.05.18 ) யாழ் மாநகரசபையின் மூன்றாவது சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்-

கடந்த யாழ் மாநகரசபை ஆட்சி மீதான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என யாராவது  உண்மையாகவே விரும்பினால் அதை விரைவாக நடத்த வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

இதை நாமும் வரவேற்கின்றோம். வலியுறுத்துகின்றோம். அதை விடுத்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைககளை மக்களின் முன்பாக சமர்ப்பிக்காமல்,

வெறுமனே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கூக்குரல்கள் மட்டும் எழுப்புவது நீதியான மக்கள் சேவையை ஆற்றிவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டித்தீர்ப்பதாகவே பார்க்க முடியும்.இலவசமாக விசாரணைக்குழுக்களை அமைக்க முடியாது. அதற்கான செலவுகளை  மக்களின் வரிப்பணத்தில் இருந்தே வழங்க முடியும்.

ஏற்றகனவே வட மாகாண சபையால் இரண்டு விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணைகளும் நடத்தப்பட்டன. அதற்காக மக்களின் வரிப்பணமே செலவிடப்பட்டிருக்கிறது.

ஆனாலும் அந்த விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்னும் பொது வெளியில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதன் மர்மம் என்ன?..

விசாரணைகள் ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டால் அதை மக்களுக்கு முதலில் அம்பலப்படுத்துங்கள். அந்த விசாரணை அறிக்கைகள் திருப்திகரமாக இல்லையென்றால் இன்னொரு விசாரணைக்குழு அமைப்பதற்கும் நாம் பூரண ஒத்துழைப்பு வழங்க தயார்.

இவ்வாறான தொனிப்பொருளில் மாநகர சபை அமர்வில் எடுத்து விளக்கியதாக தெரிவித்தார்  பிரபல சட்டத்தரணியும் யாழ் மாநகரசபை உறுப்பினருமாகிய ரெமீடியஸ்.

இதன் போது கடந்த யாழ் மாநகரசபை ஆட்சி மீது வட மாகாணசபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கைகளை

யாழ் மாநகரசபை உடாக மக்களின் முன்பாக வெளிப்படுத்த முதலில் நடவடிக்கை எடுப்பதாக  யாழ் மாநகரசபை முதல்வர் ஆனோல்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர் லோகதயாளனின் கடந்த யாழ் மாநகரசபை மீதான விசாரணை குறித்த பிரேரணை சபையால் நிராகரிக்கப்பட்டது.

Related posts: