மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகிறது – ஈ.பி.டிபியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

வறுமையையும் கஷ்டங்களையும் சந்தித்துள்ளமையினால் மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா- மணிபுரத்தில் இடம்பெற்ற சந்தை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் திலீபன் மேலும் தெரிவிக்கையில் –
மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து செல்கின்றபோதிலும் பல இடர்பாடுகளை சந்தித்த வண்ணமே உள்ளது.
இதற்கு காரணம், இந்த அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரந்தரமாக அந்த ஆசனத்தில் இருந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவதூறுகளை சிலர் பரப்பி வருகின்றனர்.
ஆனால் இத்தகைய அவதூறுகளினால் அரசாங்கத்திற்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படாது. இதேவேளை வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் ஆகவே மக்களின் முகபாவத்தினை வைத்தே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நான் அறிந்துகொள்வேன்” எனவும் அவர் தெரிவித்தள்ளமை குறிழப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|