மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் – மீள்குடியேற்ற அமைச்சரிடம் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மாகாண உறுப்பினர் தவநாதன் வலியுறுத்து!

Friday, September 14th, 2018

“போரின் பின்னரான காலப்பகுதியில் மக்கள் இதுவரை மீள் எழுச்சி பெறவில்லை. எனவே மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார அம்சங்களிலும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் கவனம் செலுத்த வேண்டும்” என வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இந்து சமய விவகார அமைச்சர் D.M சுவாமிநாதனிடம் வலியுறுத்தினார்.

கிளிநொச்சியில் தீயணைப்பு சேவையொன்றை ஆரம்பித்து வைத்த கெளரவ அமைச்சர் டி.எம் சுவாமிநாதனிடம் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் குறித்த விடயத்தை வலியுறுத்தினார்.

மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு மாற்றங்கள் எதுவும் இதுவரை இல்லை. மக்கள் இன்னும் தங்கி வாழும் நிலையிலேயே உள்ளனர் எனவே இந்த நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும்வகையிலான செயற்றிட்டங்கள் புனர்வாழ்வு அமைச்சினால் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் முழுமையான ஒரு சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு எதிர்காலத்தில் உருவாக்கி அதனையும் வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சுவாமினாதனிடம் கேட்டுக்கொண்ட மாகாணசபை உறுப்பினர்கள் வை.தவநாதன் அவர்கள் இதுவரை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

IMG_6272 IMG_6275 IMG_6318


யாழ். குடாநாடு ஹர்த்தால் காரணமாக முற்றாக ஸ்தம்பிதம்!
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் பேரணி!
கல்வி அமைச்சு அதிரடி:  தமிழ் , சிங்கள மொழி மூல ஆசிரியரக்கு வாய்ப்பு!
நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் பெற்ற முல்லைத்தீவு இளைஞன் கைது!
அரியாலை அ.த.க பாடசாலை மூடப்படும் அபாய கட்டத்தில் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!