மக்களின் நீடித்த பயன்பாட்டுக்காக சூரியக் கதிர் மின் விளக்குகள் பொருத்த ஏற்பாடு – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன்!

Sunday, July 22nd, 2018

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மக்களது அதிக பாவனையுள்ள தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு சூரியக் கதிர் மின்சார விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப் படவுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஊர்காவற்றுறையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் இதர மக்கள் அதிகளவில் தொழில் துறைகளை மேற்கொள்ளும் இடங்களில் இரவு நேரங்களில் வெளிச்சமின்மை காரணமாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட 15 இடங்களில்  சுமார் 10 இலட்சம் பெறுமதியான  நீடித்த பயனைத்தரக்கூடிய வகையிலான சூரியக்கதிர் மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது முயற்சியால் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் பல பகுதிகளில் வீதி மின்விளக்குகளும் சாலையோரங்களில் பொருத்தப்பட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பல அசௌகரியங்களிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: