மக்களின் நிரந்தர விடியலுக்கு வழிகாட்டியாக நாம் என்றும் இருப்போம் – தோழர் ஜெகன்!

Sunday, December 17th, 2017

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சுயநல அரசியல் தலைவர்களால் பல தசாப்தகாலமாக ஏமாற்றப்பட்டுவந்த மக்கள் இன்று அதன் உண்மைநிலையை உணரத் தொடங்கியுள்ளனர். இதன் பரதிபலிப்பாக வரவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை கொண்டுவர விரும்பிகின்றனர். இந்த மாற்றத்தை கொண்டு நாம் நிச்சயம் வெற்றிபெற்று எமது மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு தீர்வுபெற்றுக்கொடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் மேற்கு ஐயனார் ஆலய முன்னலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த 5 ஆம் வட்டார பகுதி மக்களுடனான உள்ளூராட்சி மன்ற தேரர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் போலித் தேசியம் பேசி மக்களை ஏமாற்றிவஶ்ரீயவர்கள் இன்று தமக்கள் குடுமிச்சண்டை பிடித்து பதவிக்காக போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்ற நிலையை மக்கள் காண்கின்றனர். இதனால் தாம் இன்றுவரை போலித் தேசியம் என்ற போர்வையில் வீழ்த்தப்பட்டு பலியாக்கப்பட்டதை உணர்ந்தள்ளனர்

இதனால் உண்மையாக மக்களது சேவகர்களாக யார் இருந்த வருகின்றனர் என்ற உண்மை நிலையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். இதனால் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சின்னமான வீணைச் சின்னமே அனைத்து மக்களது தேரிவாகவும் அமையவுள்ளது.

இந்த மாற்றத்தைக் கொண்டு நாம் எமது மக்களின் வாழ்வியல் துயரங்களை போக்குவதற்கபன வாய்ப்புக்களை உருவாக்கி காட்டுவோம் என்றார்.

இதன்போது கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts: