மக்களின் நலன்களை முன்னிறுத்தாது திணிக்கப்படும் பாதீட்டை எம்மால் ஏற்கமுடியாது – முன்னாள் முதல்லர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Friday, December 7th, 2018

கடந்த ஆட்சியில் பாதீடு தொடர்பான விபரங்களை மக்களின் அபிப்பிராயத்திற்கு காட்சிப்படுத்திய பின்னரே சபையின் விவாதத்திற்கு கொண்டுவந்திருந்தோம் ஆனால் இம்முறை அனைத்து விடயங்களையும் இரகசியமான முறையில் தயாரித்து ஒரு திணிப்பு ரீதியான பாதீடே இச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பாதீடு மக்களின் தேவைகளை புறக்கணிப்பதாக அமையாததால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டத்திற்கான விஷேட கூட்டத்தொடர் இன்றையதினம் மாநகரசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

2009 பின்னர் இந்த சபையை நாம் பொறுப்பேற்றிருந்தோம். யுத்தத்தால் பெரிதும் அழிந்து காணப்பட்ட இச்சபையின் நடவடிக்கைகளை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவந்திருந்தோம்.

இம் மாநகரின் எல்லைக்குட்பட்ட மக்களின் அநேக தேவைப்பாடுகளை அன்று நாம் முடியுமான வரையில் நிவர்த்தி செய்து கொடுத்திருந்தோம். அதுமட்டுமல்லாது இந்த சபையை இந்த மண்டபத்தைக்கூட நாம்தான் அமைத்து மக்களுக்கான சேவையை மேற்கொண்டிருந்தோம்.

அக்காலப்பகுதியில் நாம் எந்தவொரு பாதீட்டையும் மக்கள் சக்தியின் அபிப்பிராயம் கோரப்படாது பார்வைக்கு காட்சிப்படுத்தாது சபைக்கு கொண்டுவந்திருந்ததில்லை. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.

அதுமட்டுமல்லாது செலவின மதிப்பீட்டில் நிதிப்பிரமானங்களில் குறிப்பிடப்படாத வகையில் கடல்கடந்த பயணங்களுக்கான ஒதுக்கீடு எந்த வகையில் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன் பல மக்களுக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றது. இதனால் இச்சபையின் பல்வேறு விடயங்களில் எம்மால் ஒத்துப்போக முடியாதுள்ளது என தெரிவித்தார்.

Related posts: