மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 9th, 2020

எமது மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று காலை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  முன்னிலையில் களனி ரஜமகா விகாரையில் பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின்னர், அது தொடர்பில் தனது டுவிட்டரில் பதவிட்டுள்ள பதிவொன்றிலேயே பிரதமர் இவவாறு பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் – என் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பால் நான் தாழ்மையுடன் இருக்கிறேன். இலங்கையர்கள் எனக்குக் கொடுக்கும் நம்பிக்கை, எனது தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்யத் தூண்டுகிறது.

அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முற்போக்கான பயணத்தை மேற்கொள்ளும் என்பதை நான் உறுதி செய்வேன் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிததுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: