மக்களின் தேவையறிந்தே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Monday, July 30th, 2018

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலை வெற்றிகொள்ளும் வகையில் எமது அரசியல் முன்னகர்வுகள் ஒவ்வொன்றும் அமையவேண்டும் என்பதுடன் அதற்கான பொறிமுறைகளை முன்னெடுத்து அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதாகவே கட்சியின் ஒவ்வொரு பிரதிநிதியின் செயற்பாடுகளும் அமையப்பெற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச ஆலோசனை குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது கட்சியால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்றிட்டங்களும்  மக்கள் தேவைகளை அறிந்தே முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  அவர்கள் அமைச்சராக இருந்தபோது பல்வேறுபட்ட நலத்திட்டங்களையும் கட்டுமானங்களையும் தொழில்வாய்ப்புக்களையும் வாழ்வாதார மற்றும் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட பலவாறான செயற்றிட்டங்களையும் இந்த பகுதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். அத்துடன் இன்றும் அந்த முன்னெடுப்புகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும் மக்களது தேவைகளை இனங்கண்டு அவர்களது வாழ்வில் தேவைகளை வெற்றிகொள்ளச் செய்ய ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் – நல்லூர் பிரதேசத்துக்கான ஆலோசனை சபை ஒன்று  இன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகம் பிரதேச சபையின் சபைத் தொடர்களில் முன்னெடுக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கட்சியின் சபை உறுப்பினர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது மற்றும் குறித்த பிரதேசத்தின் இதர செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைளை மேற்கொள்வது  தொடர்பாகவும் ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கமளித்ததுடன் கட்சியால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் படிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உடனிருந்தார்.

Related posts: