மக்களின் திசைதிருப்ப சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளிவருகின்றன – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு!

Sunday, June 21st, 2020

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழைய சம்பவங்கள் குறித்து பேசுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிபதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் மாத்திரம் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்பது அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆட்டநிர்ணய சதி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கருத்தில் எடுத்தால் அது ஒன்பது வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற விடயம் என தெரிவித்துள்ள மஞ்சுளகஜநாயக்க குறி;ப்பிட்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளவர் அமைச்சராக அவ்வேளை பணியாற்றிய போதிலும் அமைதியாகயிருந்துள்ளார் என தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறன அறிக்கைகள் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கொரோனா வைரஸ் ஆபத்தினை எதிர்நோக்கியிருக்கும் இந்த தருணத்தில் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய விடயங்களில் கவனத்தை செலுத்தி அறிக்கைகளை விடுவதை தவிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: