மக்களின் கோரிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிவர்த்தி செய்யப்படுகின்றது – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் சுட்டிக்காட்டு!

Friday, February 26th, 2021

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த வீதிகள் பல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுடன் மிக வேகமாக காப்பெற் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன், மிக விரைவில் இது போன்ற பல்வேறு உட்கட்டுமாண அபிவிருத்தி பணிகளுடன் மக்களது நிரந்தர வாழ்வாதாரத்துக்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

யுத்தம் நிறைவடைந்த பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மக்களது வாழ்வியல் அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி பணி உள்ளிட்ட உட்கட்டமாண பணிகள் மிக வேகமாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்ட நிலை காணப்பட்டது.

ஆனால் தற்போது ஜனாதிபதி கோட்டபய ராபஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது வழிநடத்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் குறிப்பாக தீகத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னேடுத்து வருகின்றார்.

இவற்றில் குறிப்பாக குடிநீர் திட்டங்கள் பல எமது பிரதேசத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டு மக்களுக்கு கிடைமக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று மெலிஞ்சிமுனைப் பகுதிக்கான குடிநீர்குழாய்கள் பொருத்தும்பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

அத்துடன் தற்போது வீதி அபிவிருத்தியிலும் நாம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். இதற்கிணங்க மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களது முன்னுரிமையின் பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல வீதிகளை புனரமைப்பதற்கான வழிவகைகளை உருவாக்கி தந்துள்ளார்.

இதற்கிணங்க கண்ணகையம்மன் வீதி காப்பெற்றிடும் பணி பூர்த்தியாக்கப்பட்டு பயணிகள் போக்குவரத்து நடைபெறுகின்றது அத்துடன் முகாம்வீதி, தேவகொட்டாங்காடு வீதி உள்ளிட்டவற்றின் புனரமைப்புகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் கரம்பொன் காளிகா புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தினர் வைத்த கோரிக்கைக்கு அமைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளதுடன் வறிய மக்களதும் குறிப்பாக இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சினைக்கான தீர்வாக சுயதொழில் துறையை உருவாக்குவதற்கான வழிவகைகளையும் முன்னெடுக் உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: