மக்களின் கைகளிலேயே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் பொறுப்பு உள்ளது – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!

Saturday, May 9th, 2020

கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் பொறுப்பு மக்களின் கைகளிலேயே உள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிபுணத்துவ மருத்துவர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நாடு திறக்கப்படுகின்றது என்ற காரணத்திற்காக அனைவரும் உடைத்துக் கொண்டு கடைகளுக்கு செல்வதனையோ, வீதியில் திரிவதனையோ தவிர்த்து கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இதனை முழு அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொறுப்பு மக்களின் கைகளிலேயே உள்ளது.

மக்களின் சுய ஒழுக்கம் மிகவும் அவசிமானது, மக்கள் எல்லா நேரங்களிலும் அவதானத்துடன் ஒழுக்கமாக செயற்பட வேண்டியது அவசியமானது.

தங்களை பற்றி மட்டும் சிந்திக்காது அனைத்து மக்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு மக்களை சாரும். நோய்த்தொற்று பரவிய கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளது, கடந்த சில வாரங்களில் இவ்வாறான கொத்தணிகள் எதுவும் பதிவாகவில்லை.

நாட்டை திறக்கும் போது சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டிய மிகவும் இன்றியமையாததாகும் என மருத்துவர் பலிஹவடன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: