மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் – அமைச்சர் சஜித் பிரேமதாச!

Tuesday, July 16th, 2019

இம்முறை யாரும் கேம் விளையாட இடமளிக்கப்படமாட்டாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – வீரக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக முறைமையில் நாம் அனைவரும் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கூறினால் நாம் வீட்டிற்கு செல்ல வேண்டும், எனினும் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என மக்கள் கோரினால் நாம் ஆட்சியில் நீடிக்க முடியும்.

மக்களின் அபிலாஷைகளே இங்கு மிகவும் முக்கியமானது. மக்களின் அபிலாஷைகளை உதறித்தள்ளி அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து, பண பலத்தில், குடும்ப பலத்தில் இருக்கும் சிலர் ஆங்காங்கே பேச்சுவார்த்தை நடத்தி எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான தீர்மானங்களை நாமோ, பொதுமக்களோ ஏற்றுக்கொள்ள தயாரில்லை. மக்களின் தயவினால் நாம் இன்று அதிகாரத்தில் இருக்கின்றோம்.

நான் உங்களிடம் ஓர் உறுதியை வழங்குகின்றேன், இம்முறை எவருக்கும் கேம் விளையாட இடமளிக்கப்படாது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related posts: