மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021

மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காக வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார சேவைகள் நிபுணர்களை உள்ளடக்கிய அனைத்து சுகாதாரத் துறையை சார்ந்தவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது அவசியமாகுமென்று வலியுறுத்தியுள்ளார்.

கண்டி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 43 வது வருடாந்த அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகயைிலேயெ ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் சமமான பயன்தரக்கூடிய தேசிய சுகாதார கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நோக்கத்தை குறுகிய காலத்தில் அடைந்துகொள்வதற்காக புதிய ஆலோசனைகளை  வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சிக்காக 17 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்தபோது கிராமப்புற மற்றும் தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக பார்வையிட முடிந்ததாக சுட்டிக்காட்டும் ஜனாதிபதி சுகாதார கட்டமைப்பில் வெற்றிகொள்ளப்பட வேண்டிய பல்வேறு பலவீனங்களை அங்கு அடையளம் காணக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் குறித்த நிலைமைகள் மேலும் தொடர்ந்தால் மோசமான பாரிய பின் விளைவுகள் உருவாகலாம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதுடன் கிராமிய மட்டத்தில் இந்நிலையை வெற்றி கொள்வது அவசியம் என்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்வதற்கு வைத்தியர்களின் விரைவான சேவைகள் இடம்பெற வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: