மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்திய அரசியல் பாதையில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம் – தோழர் மித்திரன் தெரிவிப்பு!

Friday, May 31st, 2024

மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்தியதான அரசியல் பாதையில் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம்.

ஆனால் எதிரே வந்த அத்தனை தடைகளையும் தாண்டி தனக்கு மக்களால் வழங்கப்பட்ட குறைந்தளவான அரசியல் பலத்தைக்கொண்டு டக்ளஸ் தேவானந்தா என்னும் ஆழுமை மிக்க தலைமையில் எமது கட்சி மக்களுக்காக பெரும் பணிகளை செய்து வெற்றிகண்டுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்  அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் (31.05.2024) இடம்பெற்ற  மாவட்ட மற்றும் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடலின்  போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆர்ப்பரிக்காது அமைதியாக இருந்து மத்திய அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன்மூலமாக எமது மக்களுக்காக பெற்றுக்கொள்ள கூடிய அதிகமான தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொடுத்தமையால் தான் இன்று யுத்தத்திலிருந்து மீண்ட எமது மக்கள் ஒரு ஸ்திரமான நிலையில் இருப்பதற்கு காரணமாகியுள்ளது.
அதிகார மிடுக்க கொண்டதும் உரிமைக்காக போராடியவர்களதும் எமது ஏழை மக்களின் முதுகின்மீது ஏறி அரசியல் செய்துவரும் தமிழ் தலைவர்கள் மத்தியில்  சுயநலமோ இல்லாது உழைக்கும் பாமர மக்களின் உரிமைக்காக எமது தலைவர்  டக்ளஸ் தேவானந்தா உழைத்தக்கொண்டிருக்கின்றார்
ஆனால் துரதிஸ்டவசமாக  தமிழ் மக்களது அரசியலில் சுயநலம் கலக்கப்பட்டுள்ளதால் அந்த சுயநல போர்வைக்கள் தமிழ் மக்களது அரசியல் அதிகாரங்கள் இழுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் மக்களது நலனை முன்னிறுத்தி உழைக்கும் எமது கட்சியின் கரங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் திட்டமிடப்பட்ட வகையில் தடுக்கப்பட்டு வந்தாலும் அவற்றில் எதிர் நீச்சல் போட்டு நாம் வெற்றிகண்டு வருகின்றோம்.
இந்நிலை மாற்றம் பெறவேண்டும் என்பதே எமது விருப்பாகம் இதனூடாகத்தான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கென ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00

Related posts:

நல்லையம்பதி வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று – சிறிய தேரில் அமைதியாக வலம்வந்து பக்தர்களுக்கு ...
நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது - வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக...
போருக்கு பின்னரான 14 ஆண்டுகளில் வடக்கின் குடிப்பரம்பலில் மிகப்பெரிய மாற்றம் - தகவல் அறியும் உரிமை ச...