மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராணுவ தளபதி!

Sunday, June 12th, 2016

சாலாவ இராணுவ ஆயுதக்கிடங்கு தீப்பரவல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென்று 12 சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அந்தப்பிரதேச மக்களின் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வர 50ஆயிரம்படைவீரர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இலங்கையின் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சாலாவ தீப்பரவல் தொடர்பில் ஏற்பட்ட சேதங்களுக்காக தாம் பொதுமக்களிடம் மன்னிப்பை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் பொதுமக்களும் இராணுவத்தினரும் பாரிய பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவிசாவளையில் செய்தியாளர்களை சத்தித்தபோது இந்த கருத்துக்களை அவர்வெளியிட்டுள்ளார்.

Related posts:

சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி...
எரிபொருள் சீராக கிடைத்தால் மின் துண்டிப்பு ஏற்படாது - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!