மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை இதுவரை மக்களுககு செய்தது என்ன? – வடக்கு முதல்வரிடம் மாகாணசபை உறுப்பினர் அரியரத்தினம் கேள்வி?

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை கடந்த இரண்டரை வருடகாலமாக மக்களுக்குச் செய்தது என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அரியரத்னம் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற வடமாகாண சபையின் 58ஆவது அமர்வின் போது 5ஆண்டுகளைக்கொண்ட வடக்கு மாகாணசபையின் இதுவரையான காலப்பகுதியில் வடக்கு மக்களுக்கு மாகாணசபை ஆற்றிய செயற்பாடுகள் தொடர்பில் குறித்த சில கேள்விகளுக்கு விளக்கம் தருமாறுகோரி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் –
மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது வடக்கு மாகாணசபை இதுவரையான 33 மாதகால அட்சிக்காலப்பகுதியில் செய்த செயற்பாடுகள் தொடர்பாக மக்களிடம் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் குறித்த சில கேள்விகளுக்கான பதிலை தருமாறு உங்கள் முன் வைக்கின்றேன்.
வடக்கு மாகாணசபையால் இதுவரை காலத்தில் மக்களுக்காக சாதிக்கக்கூடியதாக அமைந்த அல்லது சாதித்த விடயங்கள் என்ன?
இக்காலப்பகுதியில் திட்டமிடப்பட்டிருந்தும் நடைமுறைப்படுத்த முடியாமல் போன விடையங்கள் என்ன?வடக்கு மாகாண சபையால் நடைமுறைப்படத்த முடியாத அல்லது சவாலாக அமைந்த விடயங்கள் எவை?
எஞ்சியுள்ள காலப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா? என முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தனது கேள்விகளை முன்வைத்திருந்தார்.
முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர் மழுப்பல் போக்கிலான பதிலையே முன்வைத்திருந்தார். அதாவது மக்களத அடிப்படை விடயங்களை முன்னிறுத்தாது தமது இதுவரையான ஆட்சிக் காலத்தில் தாங்கள் மக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் 35000 அரச ஊழியர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்டதாகவும் தெரிவித்ததுடன் கடந்தகாலத்தில் இருந்துவந்த ஆளுனரின் இடையூறுகள் இதர அழுத்தங்கள் இடையூறுகள் என்பன நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Related posts:
|
|