மக்களது தேவைகளை வென்றெடுத்து கொடுப்பதே எமது இலக்கு – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவிந்திரதாசன்!

மக்களது அதிகரித்த பலம் எமக்கு கிடைக்குமானால் மேலும் பல அபிவிருத்திகளையும் மக்கள் நலன் சார் விடயங்களையும் மேற்கொள்ள முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கட்சியை முழுமையாக மக்கள் மயப்படுத்தப்படுத்தும் செயற்பாடுகளில் ஒரு அங்கமாக பிரதேச ரீதியில் உருவாக்கப்பட்ட வட்டார ரீதியான கட்டமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் மக்களுடனான சந்திப்பொன்று நேற்றையதினம் திருநெல்வேலி 8ஆம் வட்டாரம் பகுதியில் கட்சியின் நல்லூர் தொகுதியின் நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது குறித்த பகுதி மக்கள் சுகதாரம் மற்றும் வாழ்வாதார தேவைகள் தொடர்பான பிரச்சினைகளை தாம் எதிர்கொள்வதாகவும் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத் தருமாறும் இரவீந்திரதாசனிடம் கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் மேற்படி பிரச்சினைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த பகுதிக்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வட்டார குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர் பிரதீபன், பிரதாப், செய்யோன் ,ஜெகதீஸ்வரி மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.
Related posts:
|
|