மக்களது அபிலாஷைகளை வென்றெடுக்க நாம் என்றும் உறுதியுடன் உழைப்போம் -ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!
Wednesday, October 12th, 2016கடந்த காலங்களில் தூரநோக்கான யதார்த்த உண்மைகளை நாம் தெளிவாக எடுத்தச் சொல்லியிருந்தபோது அது சுயநலம் கொண்ட பலருக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா தேர்ந்தெடுத்து ஜனநாயக பாதை தான் சரியானது என வரலாறு இன்று நிதர்சனமாக்கி வருகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நடைபெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் மாற்றுக்கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதற்கான களங்கள் கிடைத்திருக்கவில்லை. இதனால் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் எமது கட்சி முன்னெடுத்துவந்த பெரும் பணிகளையும் அதற்காக எமது உறுப்பினர்கள் செய்த தியாகங்களையும் தமிழ் மக்களிடம் அரசியல் மயப்படுத்த முடியாமல் போயுள்ளது என்பதே உண்மை நிலை.
மதிநுட்பமான முறையில் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துச்சென்ற தூரநோக்கடைய யதார்த்த அரசியல் நகர்வுகளை கடந்த காலத்தில் இதர தமிழ் தரப்பினர் தட்டிக்கழித்து வந்தனர். இத்தகைய செயற்பாடுகளின் வெளிப்பாடுகள் தான் எமது மக்கள் இன்று இத்தகையதொரு அவல வாழ்வை சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளிச்சென்றது.
நீங்கள் நம்பி வாக்களித்து அரியணை ஏற்றியவர்கள் இன்று உங்களை எட்டி உதைத்துவிட்டு தமது உண்மை முகங்களை காட்டிவருகின்றனர். தேர்தல் காலங்களில் அளிக்கப்படும் வாக்குகள் ஒவ்வொன்றும் உங்களின் அபிலஷைகளை வென்றெடுப்பதற்கான படிக்கற்களாகவே இருக்கவேண்டும். அத்தகைய வாக்கை அளிப்பதற்கு முன்னர் நீங்கள் நன்கு தெளிவடைந்தவர்களாக இருக்கவேண்டும்.
சமூகத்தில் நல்லவர்களாக நடித்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்வது எமது கொள்கை அல்ல. உண்மைகளை மக்களுக்கு எடுத்தக்கூறி அதனூடாக யதார்த்தமான விடயங்களை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். நாம் எமது மக்களுக்கு நிரந்தரமான உரிமைகளுடன் கூடிய அபிலஷைகளை வென்றெடுப்பதற்காகவே அயராது உழைத்து வருகின்றோம். ஆனால் இதர தமிழ் அரசியல் தலைமைகள் யுத்தத்தில் உயிரிழந்தோரின் ஆத்மாக்களில் ஏறிநின்று தமது சுயநல அரசியல் வியாபாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். இத்தகையவர்களது போலி முகங்களை களைந்து ஒரு புதிய பாதையைமைக்க நாம் ஒன்றுபட்டு டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலின் கிழ் பயணிப்போம்
கடந்த காலங்களில் தூரநோக்கான யதார்த்த உண்மைகளை நாம் தெளிவாக எடுத்தச் சொல்லியிருந்தபோது அது சுயநலம் கொண்ட பலருக்கு வெறுப்பாக இருந்தது. இதர தமிழ் அரசியல் தரப்பினர் பொய்களை உண்மைகளாக சித்தரித்து மக்களிடம் திணித்துவந்தனர். அத்தகைய போலிப்பேச்சுக்கள் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரையான பெருந்துயருக்கு இழுத்துச் சென்றது. இதனூடாக எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா தேர்ந்தெடுத்து ஜனநாயக பாதை தான் சரியானது என வரலாறு நிதர்சனமாக்கி வருகின்றது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|