மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் தோழர் ரங்கன்!
Monday, July 23rd, 2018கரவெட்டி பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு அனைவரும் பாரபட்சமற்ற வகையில் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச ஆலோசனை சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றையதினம் குறித்த பிரதேச கட்சியின் நிர்வாக செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக எமது கட்சியால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்றிட்டங்களும் மக்கள் தேவைகளை அறிந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்தகாலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்தபோது இப்பிரதேசத்தில் பல்வேறுபட்ட நலத்திட்டங்களையும் தொழில்வாய்ப்புக்களையும் வாழ்வாதார மற்றும் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட பலவாறான செயற்றிட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இப்பகுதி மக்களின் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருந்தார் என்பதுடன் இன்றும் அந்த முன்னெடுப்புகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
அந்தவகையில் மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்ற அவரது சிந்தனைக்கு அமைய நாம் ஒவ்வொருவரும் மக்களது தேவைகளை இனங்கண்டு அவர்களது வாழ்வியல் தேவைகளை வெற்றிகொள்ளச் செய்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி இப்பிரதேசத்தை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கரவெட்டி பிரதேச சபையின் சபைத்தொடர்களில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் ஆலோசனை சபை உறுப்பினர்களுடன் ஆராயப்பட்டதுடன் சமூக பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரம் வீடமைப்பு தொடர்பான பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றை மக்களிடம் கொண்டுசெல்லும் படிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை சபை உறுப்பினர்களால் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|