மகிந்த தரப்புடன் பேச்சுக்கு இடமில்லையாம்   மைத்திரி!

Monday, November 20th, 2017

மகிந்த அணியுடன் இனி எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுதியளித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சி, மகிந்த அணியுடன் இணையும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இரண்டு தரப்புக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் பொறுப்பை, அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கடந்த வாரம் ஏற்றிருந்தார்.

எனினும் மகிந்த அணியுடன் எந்த கூட்டுக்கும் வழியில்லை என்று மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினருக்கு உறுதியளித்துள்ளார்.

Related posts: