மகள் படுகொலை – தந்தைக்கு தூக்கு!

Tuesday, February 12th, 2019

சித்திரவதைக்கு உள்ளாக்கி மகளைக் கொலை செய்த தந்தைக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் நேற்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

மூன்றரை வயதான தனது மகளை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து அந்த நபருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தம்புத்தேகம , ஹீரிகஸ்வெவ சம்பத்கமவைச் சேர்ந்த காமினி என்றழைக்கப்படும் இங்குருவத்த என்பவருக்கே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 21 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹீரிகஸ்வெவ சுதர்ஸனகம சம்பத்கமவில் சதுனிக்கா உபேக்ஸா லக்மாலி என்ற சிறுமியை பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொலை செய்தார் என்று சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


பிறவுண் வீதியில் கிரனேட் குண்டுகள் மீட்பு!
தேசிய நல்லிணக்கம் வலுப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி!
இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை!
கள் உற்பத்தி அதிகரித்தும் விற்பனை பெரும் வீழ்ச்சி - பியரும் தாக்கம் செலுத்துகின்றதென கூறுகிறது பனை த...
பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!