மகளிருக்கான பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்!

Saturday, March 2nd, 2019

மகளிரை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு பயிற்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மகளிர் பணியகம், தேசிய பயிற்சி நிறுவனங்களின் அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனமொன்றும் இணைந்து இந்த பயிற்சித் திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

முச்சக்கரவண்டிகள் மற்றும் சைக்கிள்களைத் திருத்துதல் உள்ளிட்ட ஆறு மாதகால பயிற்சி கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுய தொழில்வாய்ப்புகளில் மகளிரை ஈடுபடுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கற்கை நெறிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு NVQ (National Vocational Qualification) சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

எத்தகைய வயது மற்றும் கல்வித்தரத்தைக் கொண்ட மகளிரும் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் விண்ணப்பங்களை மகளிர் பணியகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: