மகப்பேற்றுவைத்தியர் பற்றாக்குறையால் கிளிநொச்சிமுல்லைத்தீவுமாவட்டங்களில் கர்ப்பிணித்தாய்மார்கள் நெருக்கடிகளுக்குஉள்ளாகிவருகின்றனர்.

Monday, May 29th, 2017

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மகப்பேற்று வைத்தியர் பற்றாக்குறை காரணமாக கர்ப்பிணித்தாய்மார்கள் நாளாந்தம் பல்வேறுபட்டநெருக்கடிகளுக்குமுகங்கொடுத்துவருகின்றனர்.

குறித்த இரு மாவட்டங்களின் கர்;ப்பவதிகளுக்குமானசிகிச்சைகள் கிளிநொச்சி மாவட்டபொது மருத்துவமனையிலேயே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இதன் காரணமாகவருகைதரும் அனைவரும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாத அவலம் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சிமாவட்டத்தில் பூநகரி,பளை,கண்டாவளை, கரைச்சி ஆகிய பிரதேசங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு, மூங்கிலாறு, துணுக்காய்,மல்லாவி, பாண்டியன்குளம் ஆகியபகுதிகளில் உள்ளகர்ப்பவதிகளுக்கான சிகிச்சைகள் கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனையிலேயேமேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறித்ததினத்தில் சிகிச்சைக்கென வருகைதரும் கர்ப்பவதிகளில் கணிசமானோருக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், ஏனையோர் சிகிச்சை பெறமுடியாமலேயே திரும்பிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரதேசமருத்துவமனைகளுக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணர்களை நியமிக்கவேண்டுமென மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: