மகப்பேற்றுச் சிகிச்சைப்பிரிவு மீண்டும் செயற்படத் தொடங்கியது!

பருத்தித்துறை அரசினர் ஆதார மருத்துவமனையில் கடந்த ஒருவருடத்துக்கு மேலாக தடைப்பட்டிருந்த பெண்ணியியல் மகப்பேற்று சிகிச்சை பிரிவு நேற்று தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சிகிச்சைப் பிரிவுக்கென மருத்துவக்கலாநிதி சிவச்சந்திரன் பெண்ணியல் மகப்பேற்று மருத்துவ நிபுணராக நியமனம் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டார்.
ஆரோக்கிய பெண்கள் சுக வாழ்வு நிலையம் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சிகிச்சை பிரிவில் உயர் குருதி அழுத்தம், சலரோகம், கொலஸ்ரோல், முலைமார்பு கட்டிகள், கண்டகழலை, கருவறை வாய்ப்புற்றுநோய் போன்ற நோய்கள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் குடும்பத்திட்டம் மாதவிடாய் போன்றவற்றுக்கு மற்றும் மூப்படைந்த பெண்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.
Related posts:
பொலிஸ்மா அதிபர்யாழ்.விஜயம்: குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர் இணையவாயிலாக தரவிறக்கம் செய்யுங்கள் - பரீட்சைகள் ஆணையாளர் நாயக...
சகோதர தமிழ் மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.- வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!
|
|