பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணக்கியது – பிரதமர்!

Monday, October 10th, 2016

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் சரத்துக்களில் மாற்றமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ வெஹரகொடல்ல சேதவத்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் பௌத்த மதத்தை பாதுகாப்பது, முன்னுரிமை அளிப்பது குறித்த விடயங்களில் மாற்றம் செய்யத் தேவையில்லை என நாடாளுமன்றினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளன.

புதிய அரசியல் அமைப்பு குறித்து அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் சரத்துக்கள் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென இணங்கியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் எவ்வித சர்ச்சைகளும் கிடையாது.அரசியல் கட்சிகள் மட்டுமன்றி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடைக் கொண்டுள்ளனர்.

பௌத்த சாசனத்திற்கு சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் மஹா சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுப்பார்கள். பௌத்த மதத்தை மேம்படுத்தும் நடவடிக்கையே தற்போது மேற்கொள்ள வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

blogger-image-1075572354

Related posts: