போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை  !

Sunday, December 17th, 2017

போலி வைத்தியர்களை கைது செய்ய பொலிசாரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி வைத்தியர்களை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான தகவல்களை தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குறுத்தல் பேரவைக்கு வழங்க முடியும்.

இதுதொடர்பாக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவிக்கையில்  நாடு பூராவும் 30 ஆயிரம் வைத்தியர்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் மருத்துவ சேவைகளில் ஈடுபட தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குறுத்தல் பேரவையில் பதிவு செய்யப்படுவது அவசியமாகும் என்றார்

Related posts: