போலி முறைப்பாடுகள் குறித்து விஷேட அவதானம் – சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!
Wednesday, April 12th, 2017தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உண்மையற்ற தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்த உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
1929 என்ற இலக்கத்திற்கு தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் பொய்யான முறைப்பாடுகளை மேற்கொள்வதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.
இவ்வாறான பொய் முறைப்பாடுகள் காரணமாக அரச அதிகதாரிகளின் நேரம் மற்றும் உழைப்பு வீணடிக்கப்படுவதுடன், அநவசியமான முறையில் நிதி விரயமாவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.
24 மணித்தியாலங்களும் செயல்படக்கூடிய 1929 என்ற இலக்கத்திற்கு கிடைக்கின்ற அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் அதிகாரசபை விரைந்து செயல்படுவதாக அந்த அதிகாரசபையின் தகவல் அதிகாரி ஈ. குணசேகர கூறினார். கடந்த 2016ம் ஆண்டிற்குள் அந்த இலக்கத்திற்கு 9361 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
Related posts:
|
|