போலி தீர்வு வழங்கினால் கடுமையான நடவடிக்கை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சர்ச்சைக்குரிய நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையப்படுத்தியது சம்பந்தமா ஒப்பந்தத்தை தமக்கு வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டுள்ள போதும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தை சுகாதார அமைச்சு வழங்காவிட்டால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதேவேளை சய்டம் நிறுவனம் டெர்பில் அரசாங்கம் போலியான தீர்வை வழங்க முற்பட்டால் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.
விஷேடமாக சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறினார்.
Related posts:
|
|