போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது!
Friday, August 19th, 2016
மருதானை , புதுக்கடை மற்றும் மாளிகாவத்தை போன்ற பகுதிகளில் போலி கடவுச்சீட்டுகள் மற்றும் போலி வீசாக்கள் தயாரித்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 200 போலி கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் போலி வீசாக்களையும் தயாரித்துள்ளனர். கனடாவுக்கு நபர்களை சட்டவிரோதமாக அனுப்புவதற்காக குறித்த வீசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக போலியான அரச முத்திரைகளையும் குறித்த சந்தேக நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related posts:
மீன்வளத்தை அதிகரிக்க புதிய நடவடிக்கை - கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சு!
எரியும் நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு!
நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு - இராணுவத் தளபதி!
|
|