போலித் தேசியவாதிகளால் தமிழினம் வாழ்வியலில் மீட்சிபெற முடியா திருக்கின்றது – ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!
Sunday, November 27th, 2016கடுமையான யுத்த காலத்தில் அபிவிருத்தியையும் வாழ்வாதார உதவிகளையும் வேண்டிநின்ற இந்த காரைநகர் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செய்துகொடுத்த பெரும் பணிகளூடாகவே இன்று ஒரு புத்தெழுச்சி பெற்ற பிரதேசமாக இது நிமிர்ந்து நிற்கின்றது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கராநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் பாலாவோடை ஊரிபிட்டியெல்லை நலன்புரி அமைப்பின் புதிய கட்டிடத் திறப்புவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
மக்கள் மீது அக்கறையும் ஆற்றலும் இல்லாத சுயநலவாதிகளிடம் தமிழ் மக்களது அரசியல் அதிகாரங்கள் தொடர்ச்சியாக செல்வதனால்தான் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.
கடந்தகாலங்களில் எமது மக்களது தேவைகளுக்கான சேவைகளை எமக்கு கிடைத்த சிறிய அரசியல் அதிகாரங்களூடாகவே நாம் மத்திய அரசுடன் இணக்கமான அரசியல் நீரோட்டத்தினூடாக மேற்கொண்டுவந்திருந்தோம். எமது அதே இணக்க அரசியலை தற்போது மேற்கொள்வதாக கூறிவரும் கூட்டமைப்பினர் தமது சுய சலுகைகளை தவிர மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்காது அரசுடன் சரணாகதி அரசியல் செய்துவருகின்றனர்.
தமிழ் மக்களது அவல வாழ்வு மாறவேண்டுமானால் சுயநலமற்ற மக்களுக்காக சேவை செய்யும் அரசியல் தலைமையான டக்ளஸ் தேவானந்தாவினது கரங்களுக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களை கொடுக்க முன்வரவேண்டும். அத்தகைய ஒரு மாற்றத்தினூடாகவே தமிழ் மக்கள் வாழ்வாதாரங்களையும் அரசியல் உரிமைசார் தீர்வுகளையும் நிரந்தரமாக பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.
Related posts:
|
|