போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு கூடுதல் கால அவகாசம் கோரப்படும் – அமைச்சர் மங்கள சமரவீர!

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தியாளர்களை இன்றைய தினம் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
போர்க் குற்றச் செயல் விசாரணைகளை நடாத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடுக்கப்படும். எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்த கால அவகாசம் கோரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் இணை அணுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. முன்னதாக கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணைகளை நடத்துவதற்கு இணங்கியிருந்த இலங்கை அரசாங்கம், தற்போது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணை நடத்தப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|