போரில் உயிர் நீத்த படையினர் நினைவு யாழ்ப்பாணத்திலும்  – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, April 20th, 2017

போரில் உயிரிழந்த இராணுவத்தினரின் நினைவு நிகழ்வை யாழ்ப்பாணத்திலும் நடத்த ஏற்பாடாகியுள்ளது. இதன்போது யாழ்ப்பாணத்தில் உள்ள நீர் நிலைகளைத் துப்பரவு செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர் நீத்த இராணுவத்தினரின் நினைவு தினமான மே 7ஆம், 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும் நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது படையினர் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள நீர் நிலைகளைச் சீர் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இராணுவத்தினருடன் இணைந்து கடற்படையினரும் செயற்படுவர்.

கடற்படையினர் தமது பணியின் போது படகுகளையும் பயன்படுத்தவுள்ளனர். இந்தப் பணிகள் இடம்பெறும் காலத்தில் படையினரின் கடமையால் வீதித் தடை ஏற்படாதிருக்க வீதிப் பாதுகாப்பில் பாடசாலைச் சாரணியர்களையும் ஈடுபடுத்தத் திட்டமட்டுள்ளோம். துப்பரவு செய்வதற்காக குடாநாட்டில் 3 நீர் நிலைகள் இனம் காணப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவதாக ஆரிய குளத்தில் பணிகள் இடம்பெறும் இதனையடுத்து நல்லூர் றியோ கடை அருகில் உள்ள குளத்தையும் யாழ்ப்பாண நகரில் உள்ள புல்லுக்குளத்தையும் சீர் செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு மேற்கொள்ளும் பணிகளால் நகர் அழகுபடுத்தப்படுவதோடு டெங்கு நோயும் கட்டுப்படுத்தப்படும் குறித்த பணிகளுக்கான செலவை ஆளுநர் செயலகம் ஏற்றுள்ளது. என்றார்.

Related posts: