போராட்டம் வெடிக்கும் – கல்வியமைச்சுக்கு எச்சரிக்கை!

Sunday, September 25th, 2016

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் போராட்டம் நடத்த நேரிடும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை விடுத்துள்ளார்.

அரசாங்க வைத்திய சங்க அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு மட்டும் பிரபல பாடசாலைகள் வழங்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தலையீட்டில் அவ்வாறு அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு மட்டும் பிரபல பாடசாலைகளில் இடம் வழங்கப்பட்டால் நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இடம் ஒதுக்கப்படுவதனால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தும் மாணவ மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோருடன் இணைந்து இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்து தற்போது பேசப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

GMOA-2

Related posts: