போராட்டத்திற்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபையின் சம்பளப் பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய மின்சார சபையின் அனைத்து ஊழியர்களையும் கொழும்புக்கு அழைத்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினமும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எனினும் அது தோல்வியில் நிறைவடைந்துள்ளதாகவும், அச் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சித் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு தாதியர் சங்கம் குற்றச்சாட்டு!
20,000 பட்டதாரிகளுக்கு ஜுலை 2 முதல் நியமனம்!
இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
|
|