போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – முத்தையா முரளிதரன் கோரிக்கை!
Monday, April 11th, 2022அரசாங்கம் தீர்வு தரும்வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் உங்கள் செய்தியை பெற்றுக்கொண்டுள்ளது, அவர்களின் தீர்வுகளுக்காக காத்திருப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை மாத்திரமல்ல- பாக்கிஸ்தானை பாருங்கள் அனேகமான நாடுகள் நிதிநெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
நான் நிபுணர் இல்லை நான் பொருளாதார நிபுணண் இல்லை- பொது அறிவு அடிப்படையிலும் – ஒரு வர்த்தகர் என்ற அடிப்படையிலும் – ஒரு கிரிக்கெட் வீரர் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் எனக்கு இந்த விடயங்கள் குறித்து ஓரளவு தெரிந்திருக்கின்றது
கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகையே இல்லாத நிலை காணப்பட்டது மேலும் நாங்கள் கொவிட்டிற்காக அதிக நிதியை செலவிடநேர்ந்தது- நோயாளிகளின் மாதிரிகளை எடுப்பது தடுப்பூசிகள் போன்றவற்றிற்கு – பெருமளவு பணம் அதற்கு செலவானது.
ஏற்றுமதிகள் போதியளவு இடம்பெறவில்லை- இறக்குமதிகள் கூட குறைக்கப்பட்டுள்ளன-அவ்வேளை எண்ணெய் விலை பத்து டொலருக்கு சென்றதால் நாங்கள் தப்பினோம்.
இலங்கையில் தற்போது காணப்படுவது முக்கியமாக எண்ணெய் நெருக்கடி – உணவு நெருக்கடியில்லை- எரிசக்தி நெருக்கடியே அங்கு காணப்படுகின்றது- உக்ரைன் மீதான ரஸ்யாவின் யுத்தத்தின் பின்னர் எண்ணெய் விலைகள் 130 டொலராக அதிகரித்தன- நாங்கள் இறக்குமதி செய்யப்படும் எண்ணையை நம்பியுள்ளோம் எதனையும் உற்பத்தி செய்வதில்லை-
இதேவேளை தவறான நிர்வாகமும் காரணம் என நான் தெரிவிக்கவேண்டும் இவை அனைத்துக்கும் கொவிட் எரிபொருள் போன்றவை தான் காரணம் என நான் தெரிவிக்கவில்லை.
இந்தியா எங்களிற்கு உதவ வந்துள்ளது இதனை நான் மனதார பாராட்டுவேன்- ஏனென்றால் வரலாற்றில் எப்போதும் இந்தியாவே எங்களிற்கு உதவியுள்ளது ஆகவே நான் இந்திய பிரதமருக்கும் மக்களிற்கும் அனைத்து வர்த்தகர்களுக்கும் எங்களிற்கு ஆதரவளித்தமைக்காக தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவிப்பேன். இதன் காரணமாகவே நாங்கள் சிறிதளவு தப்பியிருக்கின்றோம்.
நாங்கள் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் மக்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து போராடினார்கள். கடந்த ஐந்து ஆறு நாட்களாக நிலைமை மோசமாக உள்ளது- அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது அரசியல் ரீதியாக பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கா உரிமை என நான் தெரிவிப்பேன்
அவர்கள் செய்தது சரி ஆனால் இது தொடரக்கூடாது இதற்கான தீர்வுகளை காணவேண்டும். மக்கள் முற்றாக நம்பிக்கையற்ற நிலையில் உள்ளனர் கடந்த சில வாரங்களாக அவர்கள் அதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கம் அதனை நன்கு புரிந்துகொண்டுள்ளது – – தாங்கள் இதற்கு தீர்வை காணவேண்டும் என்பது அரசாங்கத்திற்கு தெரியும்.
இந்த செய்தியை தெரிவித்தாகிவிட்டது தற்போது நீங்கள் தொடர்ந்தும் வீதியில் இறங்கினால் நாட்டின் சுற்றுலாத்துறை விடயத்தை அது பாதிக்கும்.
அரசியல் ரீதியாக சிந்திக்காதீர்கள் – அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சிந்தியுங்கள் – ஒரு தேசம் – உதவுவதற்கு இந்த தருணத்தில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் நாங்கள் அமைதியாக இருக்கவேண்டும் – நாங்கள் செய்தியை அரசாங்கத்திற்கு தெரிவித்துவிட்டோம்.
அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்-சரியான விடயங்களை செய்யவேண்டும் இகுறுகிய காலத்தில் செய்யவேண்டும் – குறுகிய கால நீண்டகால திட்டங்களை அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|