போராட்டங்களை ஒடுக்குவது எமது அணுகுமுறை கிடையாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021

போராட்டங்களை ஒடுக்குவது தமது அணுகுமுறை கிடையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  வீதியில் இறங்கி போராட்டங்களை செய்பவர்களை கைது செய்வதானது அவர்களை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கை நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தீர்மானம் மிக்க தருணத்தில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணம், மரண சடங்கு போன்ற மிகவும் இன்றியiமாத மனிதாபிமான தேவைகளின் போது கூட மக்கள் ஒன்று கூடுவது வரையறுக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெசாக், ஈஸ்டர் போன்ற நிகழ்வுகளின் போது மக்கள் ஒன்று கூட அனுமதிக்கப்படவில்லை எனவும் இது அடக்குமுறை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்கள் நடத்துவது மக்களின் உரிமை என்பதில் தமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது எனவும் அதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலேயே ஒர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்த ஒரே ஜனாதிபதி தாமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மக்கள் போராட்டங்களை நடத்தியபோது தாக்கப்பட்டதாகவும் தற்பொழுது அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் அவ்வாறு ஏற்றப்பட்டதன் பின்னர் நாடு முழுமையாக திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தெளிவுடைய தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து நாட்டை திறப்பதனை காலம் தாழ்த்த முறய்சிப்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: