போனி புயல் – பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி!

Thursday, May 2nd, 2019

போனி புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, ஊவா, சப்ரகமுவ, மேல், வட மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: