போதை ஒழிப்புவார செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தல்!

Thursday, January 24th, 2019

தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரம் கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு 28 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் கீழான முதன்மைச் செயற்றிட்டமாக 21 ஆம் திகதி முதல் 25 வரை போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்பூட்டும் செயலமர்வுகள் வகுப்பறைகளில் நடைபெறுகின்றன. பெற்றோர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகளும் போதைப்பொருள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் பற்றிய தெளிவுபடுத்தும் செயலமர்வுகளும் இடம்பெற்றன.

இன்று போதைப்பொருள் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகளை தெளிவூட்டும் செயலமர்வுகளும் நாளை ஊடகங்களின் வாயிலாக பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பிலான தகவல்களை வழங்கும் நிகழ்வுகளும் 26 ஆம் திகதி தனியார் தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கிய நிகழ்வுகளும் 27 ஆம் திகதி வணிகஸ்தலங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களும் நடைபெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: