போதையில் வாகனம் செலுத்தியவரின் அனுமதிப் பத்திரம் நிரந்தரமாக நிறுத்தம்

Tuesday, November 7th, 2017

மது போதையில் வாகனம் செலுத்திய முச்சக்கரவண்டிச் சாரதியின் சாரதிய அனுமதிப் பத்திரம் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் போதையில் வாகனம் செலுத்துபவர்கள் அதிகரித்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்று இப்படி அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேலணையைச் சேர்ந்த குறித்த சாரதி மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற போது ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் சிக்கினார். அவரிடம் வாகனத்துக்குரிய ஏனைய ஆவணங்களும் உரிய முறையில் இருக்கவில்லை. பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.

கடந்த வியாழக்கிழமை நீதிவான் எம்.எம்.ரியால் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சாரதி அனுமதிப்பத்திரம் தடை செய்யப்பட்டது. அவர் மீதான ஏனைய குற்றங்களுக்கும் அவருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. போதையில் வாகனம் ஓடும் போது பொலிஸாரிடம் மாட்டினால் சாரதிப் பத்திரம் வைத்திருந்தாலும் இல்லை என்றும் கூறுவதும் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வரும் போது சாரதிப்பத்திரம் உள்ளது என்றும் சம்பவம் இடம்பெறும் போது கொண்டு செல்லவில்லை என்றெல்லாம் கூறுவது வழக்கிலிருந்து தப்பிக்கும் தந்திரோபாயங்கள் என்றும் நிதிவான் குறிப்பிட்டார்.

Related posts: