போதையில் வாகனம் ஓட்டிய தனியார் பேருந்து சாரதிக்கு 3 மாத சிறை!

Wednesday, August 24th, 2016

கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்திற்கருகில் மது அருந்திய நிலையில் பேருந்தை செலுத்திய சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று காலை இடம் பெற்றுள்ளது. குறித்த தனியார் பேருந்து ஆனது 50 பயணிகளுடன் புறக்கோட்டையில் இருந்து ஹோமாகமநோக்கி பயணித்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கொடையை சேர்ந்த 46 வயதுடைய சாரதியையே கைது செய்துள்ளதாக பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர். பின்னர் சாரதியை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சாரதியிடமிருந்து ரூபா 7500 தண்ட பணமாக அறிவிடுமாறும், அவரை 3 மாதம்சிறையில் அடைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவருடைய வாகன அனுமதிப் பத்திரம் 6 மாதங்களுக்கு ஈரத்துசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: