போதைப் பொருள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வை கொள்ள வேண்டும் – பிரதமர்

போதைப்பொருள் பிரச்சினை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு போதைப்பொருள் தடுப்புத் திட்டங்கள் அமுலாக வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.கொத்துட்டுவ கந்தேபுரான விஹாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்ச்சியொன்றில் பிரதமர் உரையாற்றினார்.
பிரதமர ரணில் விக்ரமசிங்ஹ இங்கு மேலும் உரையாற்றுகையில் இலங்கையின் சனத்தொகையில் நான்கு சதவீதமானவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இது நாட்டின் சகல இன மக்களையும் பாதிக்கக்கூடியது. எனவே சகல வணக்கஸ்தலங்களும் போதைப் பொருள் பிரச்சினை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென பிரதமர் கூறினார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது அரசாங்கத்தின் நோக்கமென்றும் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|