போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : வருகிறது விரைவில் சட்டம்!

Tuesday, July 10th, 2018

நாட்டில் மரண தண்டனையை அமுல்ப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக அரச தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மாத்திரம் மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனையை செயற்படுத்துவதற்கு பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதை பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதும், அங்கிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி, மரண தண்டனை வழங்குவது தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: