போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய பாடசாலைகளை சுற்றி பொலிஸார் கடமையில்!

Wednesday, November 23rd, 2022

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, போதைப் பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

உண்மைக்குப் புறம்பான விடயங்கள்: யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவிடம் இலங்கை கோ...
வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் - கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நி...
50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை ...